பணியின்போது இறந்த 30 போலீசார் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி போலீஸ் கமிஷனர் வழங்கினார்


பணியின்போது இறந்த 30 போலீசார் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி போலீஸ் கமிஷனர் வழங்கினார்
x
தினத்தந்தி 16 Dec 2021 12:08 AM GMT (Updated: 16 Dec 2021 12:08 AM GMT)

கொரோனாவால் உயிரிழந்த சிறப்பு எஸ்.ஐ. குடும்பத்துக்கு ரூ.25 லட்சம்: பணியின்போது இறந்த 30 போலீசார் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் வழங்கினார்.

சென்னை,

கொரோனா நோய் தொற்று தடுப்பு பணியின்போது, தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சென்னை தலைமைச் செயலக காலனி போலீஸ் நிலைய சிறப்பு எஸ்.ஐ. எம்.பாபு குடும்பத்துக்கு முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.25 லட்சம் மற்றும் பணியின்போது உடல்நல குறைவு மற்றும் சாலை விபத்துகளில் இறந்த சென்னை பெருநகர காவல் சட்டம்-ஒழுங்கு, போக்குவரத்து பிரிவு, ஆயுதப்படை மற்றும் சிறப்பு பிரிவுகளில் பணிபுரிந்த 30 போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.3 லட்சம் என மொத்தம் ரூ.90 லட்சம் நிதியுதவி வழங்க ஒப்புதல் பெறப்பட்டது.

அதன் பேரில் சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சிறப்பு எஸ்.ஐ. பாபுவின் மனைவியிடம் ரூ.25 லட்சத்துக்கான வரைவோலையையும், மேலும் பணியின்போது இறந்த 2-ம் நிலை காவலர் முதல் சிறப்பு எஸ்.ஐ.க்கள் வரையிலான 30 காவல் அதிகாரிகள் மற்றும் போலீசாரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் என 30 காவல் குடும்பத்தினருக்கு ரூ.90 லட்சம் என மொத்தம் ரூ.1 கோடியே 15 லட்சத்துக்கான வரைவோலையையும் வழங்கினார். மேலும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கீமோ தெரபி சிகிச்சை பெற்ற திருவொற்றியூர் போக்குவரத்து போலீஸ் நிலைய தலைமை காவலர் பிரபுவுக்கு மருத்து சிகிச்சை செலவான ரூ.5.2 லட்சத்தை போலீஸ் நல நிதியில் இருந்து ரொக்கமாக வழங்கப்பட்டது.

Next Story