ரூ.2 கோடி கோவில் நிலம் மீட்பு


ரூ.2 கோடி கோவில் நிலம் மீட்பு
x
தினத்தந்தி 16 Dec 2021 10:34 AM IST (Updated: 16 Dec 2021 10:34 AM IST)
t-max-icont-min-icon

திருவையாறு அருகே கோர்ட்டு உத்தரவுப்படி ரூ.2 ேகாடி மதிப்புள்ள கோவில் நிலம் மீட்கப்பட்டு இந்து சமய அறநிலையத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது,

திருவையாறு:
திருவையாறு அருகே கோர்ட்டு உத்தரவுப்படி ரூ.2 ேகாடி மதிப்புள்ள கோவில் நிலம் மீட்கப்பட்டு இந்து சமய அறநிலையத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது,
பிரம்மசிரகண்டீஸ்வரர் கோவில் 
தஞ்சை மாவட்டம் திருவையாறை அடுத்த கண்டியூரில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பிரம்மசிரகண்டீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான 3 ஏக்கர், 10 சென்ட் நிலம் கண்டியூர்- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. 
இந்த நிலத்தை குத்தகைதாரர் ஒருவர் குத்தகை எடுத்துள்ளார். பின்னர் நீண்டகாலமாக குத்தகைதாரர் கோவிலுக்கு குத்தகை செலுத்தாமல் இருந்துள்ளார். கோவில் நிலத்தை மீட்டு தர வேண்டும் என்று  கோவில் நிர்வாகம் சார்பில் தஞ்சை வருவாய் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.  வழக்கை விசாரித்த வருவாய் கோர்ட்டு கோவிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு தீர்ப்பளித்தது. 
கோவில் நிலம் மீட்பு 
கோர்ட்டு உத்தரவி்ன்படி வருவாய் கோர்ட்டு அமலாக்க தனி வருவாய் ஆய்வாளர் ரமேஷ், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சிவராம்குமார் ஆகியோர் முன்னிலையில் ரூ.2 கோடி மதிப்பிலான கோவில் நிலம் மீட்கப்பட்டு கோவிலுக்கு சொந்தமான இந்து சமய அறநிலையத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. 
அப்போது வருவாய் ஆய்வாளர் மஞ்சுளா, நில அளவையர் கஸ்தூரி, கண்டியூர் கிராம நிர்வாக அலுவலர் சதீஷ், கோவில் செயல் அலுவலர் பிருந்தாதேவி மற்றும் சரக ஆய்வாளர்கள் கீதாபாய், லட்சுமி, கோவில் எழுத்தர் பஞ்சநாதன் செந்தில்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story