போச்சம்பள்ளி அருகே மரக்கிளையை வெட்டிய போது மின்சாரம் தாக்கி விவசாயி சாவு


போச்சம்பள்ளி அருகே மரக்கிளையை வெட்டிய போது மின்சாரம் தாக்கி விவசாயி சாவு
x
தினத்தந்தி 16 Dec 2021 10:34 AM IST (Updated: 16 Dec 2021 10:34 AM IST)
t-max-icont-min-icon

போச்சம்பள்ளி அருகே மரக்கிளையை வெட்டியபோது மின்சாரம் தாக்கி விவசாயி பரிதாபமாக இறந்தார்.

மத்தூர்:
போச்சம்பள்ளி அருகே மரக்கிளையை வெட்டியபோது மின்சாரம் தாக்கி விவசாயி பரிதாபமாக இறந்தார்.
விவசாயி
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த பொங்கனூர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 62). விவசாயி. இவர் நேற்று முன்தினம் விவசாய பணிகளுக்காக தனது நிலத்தில் இருந்த வேப்பமரத்தின் கிளைகளை வெட்டும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது வெட்டப்பட்ட மரக்கிளை எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த மின்கம்பி மீது விழுந்தது. இதில் ராமசாமி மீது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போச்சம்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் விசாரணை
அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று ராமசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போச்சம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story