ஆவடி சி.ஆர்.பி.எப். மைதானத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான பேஷன் ஷோ


ஆவடி சி.ஆர்.பி.எப். மைதானத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான பேஷன் ஷோ
x
தினத்தந்தி 16 Dec 2021 2:10 PM IST (Updated: 16 Dec 2021 2:10 PM IST)
t-max-icont-min-icon

மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆவடி சி.ஆர்.பி.எப். வளாகத்தில் உள்ள மைதானத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பேஷன் ஷோ நிகழ்ச்சியை நடத்தியது.

இதில் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் சி.ஆர்.பி.எப்.-ல் பணிபுரியும் அதிகாரிகளின் மாற்றுத்திறனாளி குழந்தைகள் 12 பேர் இதில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் சி.ஆர்.பி.எப். டி.ஐ.ஜி. தினகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் தேசிய அளவில் நடைபெற்ற வீல்சேர், கூடைப்பந்து, பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள் 5 பேருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. 

மேலும் மும்பையில் இருந்து வந்த மாடல் அழகிகளுடன் மாற்றுத்திறனாளிகள் வீல்சேரில் வந்து பங்கேற்றனர். இதில் ‘பிக்பாஸ்’ பிரபலம் சம்யுக்தா, 2018-ம் ஆண்டு புதுச்சேரியில் இருந்து கடலூர் வரை கைகள் மட்டும் பயன்படுத்தி 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு கடலில் நீச்சல் அடித்து சாதனை படைத்த ஸ்ரீராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story