மனைவியிடம் வீடியோ காலில் பேசியபடி எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை


மனைவியிடம் வீடியோ காலில் பேசியபடி எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை
x

மனைவியிடம் வீடியோ காலில் பேசியபடி எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை அயனாவரம், மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் வில்லியம் பாபு (வயது 36). எலக்ட்ரீசியன். இவருடைய மனைவி சர்மிளா (26). இவர்களுக்கு 3 வயதில் மகன் உள்ளான். நேற்று காலை சர்மிளா வேலைக்கு சென்று விட்டார். இந்தநிலையில் வில்லியம் பாபு நேற்று மதியம் தனது மனைவி சர்மிளாவுக்கு செல்போனில் வீடியோ கால் செய்து பேசினார். 

திடீரென அவர், மனைவியுடன் வீடியோ காலில் பேசியபடியே வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை கண்டு சர்மிளா அதிர்ச்சி அடைந்தார்.இதுகுறித்து அயனாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வில்லியம் பாபுவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.


Next Story