படிக்கட்டில் தொங்கியபடி பயணிகள் நின்றதால் பஸ்சை நிறுத்திய டிரைவர்
திருவள்ளூர் மாவட்டம் படிக்கட்டில் தொங்கியபடி பயணிகள் நின்றதால் பஸ்சை டிரைவர் நிறுத்திவிட்டார்.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே.பேட்டை ஒன்றியம் மகன்காளிகாபுரம் கிராமத்தில் இருந்து தடம் எண்-48 கொண்ட அரசு பஸ் நேற்று காலை திருத்தணிக்கு புறப்பட்டது. இந்த பஸ் ஆர்.கே.பேட்டை வந்தபோது, பஸ்சில் அதிகப்படியான பயணிகள் ஏறினார்கள். இதனால் படிக்கட்டில் பலர் தொங்கிக்கொண்டு பயணம் செய்தனர். இதனால் பஸ் நிறுத்தத்தில் இருந்து 100 மீட்டர் சென்றபோது பஸ்சை டிரைவர் நிறுத்திவிட்டார்.
கூடுதல் பயணிகள் இறங்கினால் மட்டுமே பஸ்சை ஓட்டுவேன் என்று அவர் கறாராக பேசினார். தகவல் கிடைத்ததும் ஆர்.கே.பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் பஸ்சில் இருந்த அதிகப்படியான பயணிகளை கீழே இறக்கி குறிப்பிட்ட பயணிகளுடன் செல்ல அனுமதித்தனர்.
Related Tags :
Next Story