சங்கராபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட மாநாடு


சங்கராபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட மாநாடு
x
தினத்தந்தி 16 Dec 2021 9:21 PM IST (Updated: 16 Dec 2021 9:21 PM IST)
t-max-icont-min-icon

சங்கராபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட மாநாடு

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் 23-வது மாநாடு சங்கராபுரம் தனியார் மண்டபத்தில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் செந்தில் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் சசிகுமார், செயற்குழு உறுப்பினர்கள் பூவராகன், ஏழுமலை, ஒன்றிய செயலாளர்கள் சிவாஜி, பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் வரவேற்றார். செயற்குழு உறுப்பினர் ஜெய்சங்கர் அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார். மாநில செயற்குழு உறுப்பினர் வெங்கட்ராமன் மாநாட்டை தொடங்கி வைத்தார். மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், மாநிலகுழு உறுப்பினர் ஆனந்தன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினா், மாவட்டச் செயலாளர் ஏழுமலை வேலை அறிக்கையை முன்மொழிந்தார். 

மாநாட்டில் 35 பேர் கொண்ட புதிய மாவட்ட குழு தேர்வு செய்யப்பட்டு புதிய மாவட்ட செயலாளராக ஜெய்சங்கர் தேர்வு செய்யப்பட்டார். விவசாயத்தை அழிக்கும் கல்வராயன்மலை கைகான் வளைவு திட்டப்பணிகளை தடைசெய்ய வேண்டும், தென்பெண்ணை, கெடிலம் ஆறுகள் இணைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், தனியார் தரணி சர்க்கரை ஆலையை அரசே ஏற்று நடத்த வேண்டும், சங்கராபுரத்தில் சிப்காட்டுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் தொழிற்சாலைகளை அமைத்து வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story