திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு
திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு
திருக்கோவிலூர்
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை ஆய்வு செய்தார். முன்னதாக திருக்கோவிலூர் அருகே உள்ள தேவி அகரம் கிராமத்தில் ரூ.20 லட்சம் செலவில் பள்ளி சுற்றுச் சுவர் கட்டும் பணி, ஏரிக்கரை சாலையில் ரூ.2 லட்சம் செலவில் தடுப்புச்சுவர் கட்டும் பணி, ஆவியூர் கிராமத்தில் தனிநபர் கழிவறை மற்றும் பண்ணை குட்டை அமைக்கும் பணி ஆகியவற்றை ஆய்வு செய்த கலெக்டர் ஸ்ரீதர், ஆவி கொளப்பாக்கம் கிராமத்தில் ரூ.4 லட்சத்து 34 ஆயிரம் செலவில் நடைபெற்று வரும் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி, ரூ.32 ஆயிரம் செலவில் உறிஞ்சி குழாய் அமைக்கும் பணி, வட மலையனூர் கிராமத்தில் ரூ.19 லட்சம் செலவில் நடைபெற்றுவரும் கிணறு பாம்பு மற்றும் அதற்குண்டான இதர பணிகள், ரூ.10 லட்சம் செலவில் நடைபெற்றுவரும் தொகுப்பு வீடுகள் கட்டும் பணி ஆகியவற்றையும் பார்வையிட்டு பணிகளை தரமாக விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
அப்போது மாவட்ட திட்ட இயக்குனர் டாக்டர் மணி, திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றிய கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் துரைராஜ், ஆவி கொளப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ஹேமமாலினிமூர்த்தி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முகமதுஅயூப், முகம்மது ஜமீல், சங்கர் மற்றும் சந்திரசேகரன், ஒன்றிய பொறியாளர்கள் சுப்பிரமணியன், பழனிவேல், ஹரிகிருஷ்ணன், பணி மேற்பார்வையாளர்கள் குமார், காமராஜ், சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story