திருவாரூர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.154 கோடி கடன் தள்ளுபடி அமைச்சர் சக்கரபாணி பேச்சு


திருவாரூர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.154 கோடி கடன் தள்ளுபடி அமைச்சர் சக்கரபாணி பேச்சு
x
தினத்தந்தி 16 Dec 2021 10:09 PM IST (Updated: 16 Dec 2021 10:09 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.154 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறினார்.

திருவாரூர்:-

திருவாரூர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.154 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறினார்.

சிறப்பு திட்ட முகாம்

திருவாரூர் தெற்கு வீதியில் உள்ள திருமண மண்டபத்தில் மக்களை தேடி முதல்வர் சிறப்பு திட்ட முகாம் நேற்று நடந்தது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கினார். திருவாரூர் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
இதில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார். இதனை தொடர்ந்து வீட்டு மனைப்பட்டா உள்ளிட்ட நலதிட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது அமைச்சர் பேசியதாவது:-

கடன் தள்ளுபடி

மக்களை தேடி முதல்வர் என்ற சிறப்பு திட்ட முகாம்களில் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்படும். தி.மு.க. தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.154 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலா சிதம்பரம், உதவி கலெக்டர் பாலசந்திரன், அறங்காவல் குழு முன்னாள் தலைவர் பிரகாஷ், நகரசபை முன்னாள் துணைத்தலைவர் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் வரவேற்றார். முடிவில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார் நன்றி கூறினார்.

Next Story