‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள்


‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள்
x
தினத்தந்தி 16 Dec 2021 10:18 PM IST (Updated: 16 Dec 2021 10:18 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சாலை பணிகள் விரைந்து முடிக்கப்படுமா?

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் ஆதிச்சபுரம், மாதா கோவில் தெருவில் சாலை குண்டும், குழியுமாக இருந்தது. இந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் தார்ச்சாலை போடுவதற்காக ஜல்லி கற்கள் கொட்டப்பட்டது. ஆனால் பாதியிலேயே சாலை போடும் பணி நின்று விட்டது. இதனால் ஜல்லி கற்கள் பெயர்ந்து வெளியே தெரிகின்றது. இதனால் வாகனத்தில் செல்வோர் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். மாணவ-மாணவிகள், பொதுமக்கள் நடந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து தார்ச்சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும். 
-பொதுமக்கள், மாதா கோவில்தெரு.

Next Story