உளுந்தூர்பேட்டை அருகே குடிபோதையில் தகராறு தொழிலாளி அரிவாளால் வெட்டி கொலை


உளுந்தூர்பேட்டை அருகே குடிபோதையில் தகராறு தொழிலாளி அரிவாளால் வெட்டி கொலை
x
தினத்தந்தி 16 Dec 2021 10:58 PM IST (Updated: 16 Dec 2021 10:58 PM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளியை அரிவாளால் வெட்டி கொலை செய்த தந்தையை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்


உளுந்தூர்பேட்டை

தொழிலாளி

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள களவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கேசவன். இவரது மகன் சிவமணி. தொழிலாளியான இவருக்கும் அவரது தந்தை கேசவனுக்கும் குடிபோதையில் அவ்வப்போது சண்டை நடைபெறும் என கூறப்படுகிறது. 

வழக்கம்போல நேற்று இரவும் அவர்களுக்கிடையே சண்டை நடந்தது. இதில் ஆத்திரம் அடைந்த கேசவன் அரிவாளால் சிவமணியின் கழுத்தில் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்து கீழே விழுந்த சிவமணி ரத்த வெள்ளத்தில் துடி துடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

வலைவீச்சு

இதுபற்றிய தகவல் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் சிவமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள கேசவனை வலைவீசி தேடி வருகிறார்கள். 

குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பெற்ற மகனை தந்தையே அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :
Next Story