கள்ளக்காதலிக்கு ஆயுள் தண்டனை


கள்ளக்காதலிக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 16 Dec 2021 10:58 PM IST (Updated: 16 Dec 2021 10:58 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் கூலி தொழிலாளியை எரித்து கொலை செய்த வழக்கில் கள்ளக்காதலிக்கு ஆயுள் தண்டனை வழங்கி திருவண்ணாமலை மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் கூலி தொழிலாளியை எரித்து கொலை செய்த வழக்கில் கள்ளக்காதலிக்கு ஆயுள் தண்டனை வழங்கி திருவண்ணாமலை மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கூலி தொழிலாளி

திருவண்ணாமலை அவலூர்பேட்டை ரோடு ரெயில்வே கேட் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 35), கூலி தொழிலாளி. திருமணமானவர்.

 இவருக்கும் மேல்செங்கம் பெரியஅகரம் பகுதியை சேர்ந்த வசந்தி (40) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு பின்னர் கள்ளக்காதலாக மாறியது. 
வசந்தி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். 

இவர்கள் இருவரும் திருவண்ணாமலை அய்யங்குளத்தெருவில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர்.

இந்த நிலையில் வெங்கடேசனுக்கும், வசந்திக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ந் தேதி வெங்கடேசன், வசந்தியின் வீட்டில் தங்கியுள்ளார். 

அப்போது கருத்து வேறுபாடு காரணமாக வெங்கடேசனை வசந்தி மண்எண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்ய முயன்றார்.  

இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அக்டோபர் 2-ந் தேதி அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆயுள் தண்டனை

இதற்கிடையில் வெங்கடேசன் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த சம்பவத்தை திருவண்ணாமலை டவுன் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து வசந்தியை கைது செய்தனர். 

இந்த வழக்கு தொடர்பான விசாரணை திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இன்று  இவ்வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி திருமகள் தீர்ப்பு கூறினார். 

அதில் வெங்கடேசனை எரித்து கொலை செய்த வசந்திக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதையடு்த்து வசந்தியை போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story