வேறொருவருடன் உல்லாசமாக இருந்ததை தட்டிக்கேட்ட வாலிபரை எரித்துக்கொல்ல முயன்ற கள்ளக்காதலி கைது-உடந்தையாக இருந்தவரும் சிக்கினார்


வேறொருவருடன் உல்லாசமாக இருந்ததை தட்டிக்கேட்ட வாலிபரை எரித்துக்கொல்ல முயன்ற கள்ளக்காதலி கைது-உடந்தையாக இருந்தவரும் சிக்கினார்
x
தினத்தந்தி 16 Dec 2021 11:59 PM IST (Updated: 16 Dec 2021 11:59 PM IST)
t-max-icont-min-icon

வேறொருவருடன் உல்லாசமாக இருந்ததை தட்டிக்கேட்ட வாலிபரை தீவைத்து எரித்துக்கொல்ல முயன்ற கள்ளக்காதலி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

வெண்ணந்தூர்:
கள்ளக்காதல்
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகே உள்ள தட்சன்காடு பகுதியை சேர்ந்தவர் குமார். இவருடைய மனைவி மாரியம்மாள் (வயது 33). இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மாரியம்மாள் அதேபகுதியில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக தனியாக வசித்து வருகிறார். மேலும் அவர் அங்குள்ள சேகோ ஆலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
அப்போது அதே ஆலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வரும் லோகநாதன் மகன் விக்னேஷ் (25) என்பவருடன் மாரியம்மாளுக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. அடிக்கடி அவர்கள் 2 பேரும் தனியாக சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர்.
வேறொருவருடன் பழக்கம்
இதனிடையே விக்னேஷ், தனியாக வசித்து வந்த மாரியம்மாள் வீட்டில் குடியேறினார். கடந்த 5 ஆண்டுகளாக அவர்கள் கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்தனர். அவர்களின் கள்ளக்காதல் எந்த தொந்தரவும் இன்றி தொடர்ந்து வந்தது.
இந்தநிலையில் ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியை சேர்ந்த குமார் (40) என்பவருடன் மாரியம்மாளுக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது கள்ளக்காதலாக மாறியது. விக்னேஷ் வீட்டில் இல்லாதபோது மாரியம்மாள், குமாருடன் உல்லாசமாக இருந்து வந்தார்.
உல்லாசம்
சில மாதங்களுக்கு முன்பு குமார், மாரியம்மாள் வீட்டின் பக்கத்து வீட்டில் வாடகைக்கு குடியேறினார். இவர்கள் 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தனர். இது விக்னேசுக்கு தெரியவந்ததை தொடர்ந்து அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் மாரியம்மாளிடம் கேட்டு, தகராறு செய்தார். 
சம்பவத்தன்று இரவு விக்னேஷ் வெளியே சென்றபோது, மாரியம்மாள் கள்ளக்காதலன் குமாருடன் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக வீட்டுக்கு வந்த விக்னேஷ் உல்லாசமாக இருந்ததை பார்த்தார். அவர் மாரியம்மாளிடம் ‘எப்படி வேறு நபருடன் உல்லாசமாக இருக்கலாம்?’ என தட்டி கேட்டார்.
எரித்துக்கொல்ல முயற்சி
இதில் ஆத்திரம் அடைந்த மாரியம்மாள், குமார் ஆகியோர் வீட்டில் இருந்த பெட்ரோலை எடுத்து விக்னேஷ் மீது ஊற்றி தீ வைத்தனர். தீ அவரது உடையில் பரவியது. உடனடியாக அவர் ஆடைகளை களைந்து விட்டு, தண்ணீரை உடலில் ஊற்றினார். இருப்பினும் அவருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து விக்னேஷ் வெண்ணந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரியம்மாள், குமாரை கைது செய்தனர்.வெண்ணந்தூர் அருகே வேறொரு நபருடன் உல்லாசமாக இருந்ததை தட்டிக்கேட்ட வாலிபரை கள்ளக்காதலி எரித்துக்கொல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story