பெருமாப்பட்டி அரசு பள்ளி தலைமை ஆசிரியை உள்பட 2 பேர் இடமாற்றம்


பெருமாப்பட்டி அரசு பள்ளி தலைமை ஆசிரியை உள்பட 2 பேர் இடமாற்றம்
x
தினத்தந்தி 16 Dec 2021 11:59 PM IST (Updated: 16 Dec 2021 11:59 PM IST)
t-max-icont-min-icon

பெருமாப்பட்டி அரசு பள்ளிதலைமை ஆசிரியை உள்பட 2 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

நாமக்கல்:
மாணவர்கள் முன்பு சண்டை
நாமக்கல் அருகே உள்ள பெருமாப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 60 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியை ஜோதி, இடைநிலை ஆசிரியை ராஜேஸ்வரி ஆகிய இருவரும் மாணவ, மாணவிகள் முன்னிலையில் சண்டை போட்டு கொண்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே 5-ம் வகுப்பு மாணவியை தலைமை ஆசிரியை திட்டியதாக கலெக்டர் அலுவலகத்திற்கு புகார் சென்றது. இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டர் ஸ்ரேயாசிங், முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரிக்கு உத்தரவிட்டார். முதன்மை கல்வி அலுவலரின் அறிவுறுத்தல்படி மாவட்ட கல்வி அலுவலர் ராமன் நேற்று முன்தினம் அந்த பள்ளிக்கு சென்று மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடம் விசாரணை நடத்தினார்.
இடமாற்றம்
விசாரணையில், தலைமை ஆசிரியை, இடைநிலை ஆசிரியை இருவருக்கும் இடைய சுமூக உறவு இல்லை என்பதும், இதனால் மாணவர்கள் நலன் பாதிக்கப்படுவதும் தெரியவந்தது.
இதையடுத்து மாவட்ட கல்வி அலுவலர் ராமன், இருவரையும் வெவ்வேறு பள்ளிகளுக்கு இடமாறுதல் செய்து உத்தரவிட்டார். அதன்படி தலைமை ஆசிரியை ஜோதி கரட்டுபட்டி பள்ளிக்கும், ஆசிரியை ராஜேஸ்வரி கொடிக்கால்புதூர் பள்ளிக்கும் மாற்றப்பட்டு உள்ளனர்.

Next Story