வாணியம்பாடி அருகே பக்கத்து வீட்டில் நகை, பணம் திருடிய வாலிபர் கைது


வாணியம்பாடி அருகே பக்கத்து வீட்டில் நகை, பணம் திருடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 17 Dec 2021 12:00 AM IST (Updated: 17 Dec 2021 12:00 AM IST)
t-max-icont-min-icon

பக்கத்து வீட்டில் நகை, பணம் திருடிய வாலிபர் கைது

வாணியம்பாடி

வாணியம்பாடியை அடுத்த ராமநாயக்கன் பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. சென்னையில் லேப் டெக்னீஷியனாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மற்றும் குழந்தைகள் மட்டும் ராமநாயக்கன் பேட்டையில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர்.
இவர்கள் கடந்த 1-ந் தேதி திருப்பத்தூர் அருகே உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் திருட்டு போயிருப்பது தெரியவந்தது. 

இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி அம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலிசார் அருகில் வசிப்பவர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது பக்கத்து வீட்டை சேர்ந்த சந்தோஷ்குமார் (வயது 27) என்வர் மீது சந்தேகம் எழுந்து அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் நகை பணம் திருடியதை ஒப்புக்கொண்டார். அவரை கைது செய்த போலீசார், 5 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

Next Story