சாலைப்பணியால் நிறுத்தப்பட்ட மினிபஸ்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா மேல்முட்டுக்கூர் பஞ்சாயத்து தட்டாங்குட்டை கிராமம் வரை உள்ள சாலை மிகவும் பழுதடைந்துள்ளது. இதுகுறித்து முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பப்பட்டது. கண் துடைப்பு நடவடிக்கையாக ஜல்லிக்கற்கள் மட்டுமே போட்டுள்ளார்கள். கடந்த 6 மாதமாக சாலையில் தார் ஊற்றாமல் கிடப்பில் போட்டு விட்டனர். தார் சாலை போடாமல் இருப்பதால் அந்த வழியாக இயக்கப்பட்டு வந்த மினிபஸ்சும் இயக்கப்படாமல் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-வினோத்குமார், தட்டாங்குட்டை. |
சாலையை சீர் செய்ய வேண்டும்
வேலூர் பலவன்சாத்துக்குப்பம் ஆசிரியர் சுப்பிரமணியம் தெருவுக்கு பக்கத்துத் தெருவில் உள்ள சாலை அண்மையில் பெய்த மழையால் சேறும் சகதியுமாக மாறி விட்டது. அந்த வழியாக வாகனங்களில் சென்று வரவும், நடந்து செல்லவும் சிரமமாக உள்ளது. எங்கள் தெருவில் மின் விளக்குகள் இல்லை. இதனால் சாலை பகுதியில் மதுபானம் குடித்தல் ஆகிய தகாத செயல்கள் நடக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையில் முரம்பு மண் கொட்டி சீர் செய்து தர வேண்டும், தெரு மின் விளக்கு அமைத்துத் தர வேண்டும். |
-பழனி, பலவன்சாத்துகுப்பம். |
சாலையில் தேங்கும் கழிவுநீர்
திருவண்ணாமலை பேகோபுரம் 3-வது தெருவில் சாலையில் கழிவுநீர் வழிந்தோடி தேங்குகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. கொசு தொல்லை உள்ளது. கால்வாயை தூர்வாருவார்களா? |
ஆபத்தான மின்கம்பம்
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தை அடுத்த புதுப்பட்டு பெரிய தெரு, திடீர்நகர் ஆகிய பகுதிகளில் உள்ள மின் கம்பங்களின் சிமெண்டு பூச்சு உதிர்ந்து உள்ேள இருக்கிற கம்பி ெவளியே தெரிகிறது. எந்தநேரத்திலும் கம்பம் முறிந்து விழும் ஆபத்து உள்ளது. எனவே, ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பங்களை போர்க்கால அடிப்படையில் மாற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும். |
குப்ைப வண்டிகளால் இடையூறு
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஆசிரியர்நகர் பகுதியில் நகராட்சி சிறுவர் பூங்கா உள்ளது. அங்கு காலை, மாலையில் பலர் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். குழந்தைகள், பெரியவர்கள் மாலை நேரத்தில் ஓய்வெடுக்க பூங்காவுக்கு வருகின்றனர். அங்கு நகராட்சி குப்பை பேட்டரி வண்டிகள், பழுதான வண்டிகள் மக்களுக்கும், சிறுவர்களுக்கும் இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதை, இடையூறு இல்லாமல் ஓரமாக நிறுத்தி வைத்தால் மக்களுக்கு பயன் அளிக்கும். அதிகாரிகள் செய்வார்களா? |
-சிவக்குமார், வாணியம்பாடி. |
கழிவுநீர் கால்வாய் வசதி
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது பேராயம்பட்டு. அங்குள்ள வடக்குத்தெருவில் பொதுமக்கள் கழிவுநீரை தெருவில் வெளியேற்றுகிறார்கள். இதனால் தெருக்களில் ஆங்காங்கே குளம்போல் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதிகளில் கொசுக்கள் உற்பத்தியாகி காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் வரும் அபாயம் உள்ளது. எங்கள் தெருவில் கழிவுநீர் கால்வாய் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும். |