வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்
வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூர்
திருப்பத்தூரில் அனைத்து பொதுத்துறை வங்கி ஊழியர்கள் சார்பில் வாணியம்பாடி சாலையில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கி முன்பு வேலைநிறுத்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வங்கி ஊழியர்கள் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.சுந்தரேசன் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் சார்லஸ் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தை வங்கி ஊழியர்கள் சங்க தலைவர் ரவிபிரபு தொடங்கி வைத்து பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் வங்கிகள் சட்ட திருத்த மசோதாவை திரும்பப்பெற கோரியும், வங்கிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினார்கள். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சாமி கண்ணு, கே.கே.மணி, மஞ்சுநாத், சதீஷ், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story