நடிகைகளுக்கு கொரோனா பாதிப்பை ஏற்படுத்திய கரண் ஜோகர் நடத்திய விருந்தில் மந்திரி கலந்து கொண்டாரா?
நடிகைகளுக்கு கொரோனா பாதிப்பை ஏற்படுத்திய கரண் ஜோகர் நடத்திய விருந்தில் மந்திரி கலந்துகொண்டாரா என பா.ஜனதா கேள்வி எழுப்பி உள்ளது.
மும்பை,
நடிகைகளுக்கு கொரோனா பாதிப்பை ஏற்படுத்திய கரண் ஜோகர் நடத்திய விருந்தில் மந்திரி கலந்துகொண்டாரா என பா.ஜனதா கேள்வி எழுப்பி உள்ளது.
நடிகைகளுக்கு கொரோனா
இந்திப்பட இயக்குனரும்- தயாரிப்பாளருமான கரண் ஜோகரின் வீட்டில் சமீபத்தில் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நடிகைகள் கரீனா கபூர், அம்ரிதா ஆரோரா மற்றும் சீமா கான் அகியோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டது.
இதையடுத்து அவர்களுடன் விருந்தில் கலந்துகொண்ட நபர்களை கண்டறிந்து மும்பை மாநகராட்சி அதிகாரிகள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் விருந்தை ஏற்பாடு செய்திருந்த கரண் ஜோகருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பலரும் சமூக வலைதளங்களில் கரண் ஜோகரை கடுமையாக விமர்சித்து வந்தனர்.
மந்திரி கலந்துகொண்டாரா?
இந்த நிலையில் தனது வீட்டில் நடைபெற்றது விருந்து நிகழ்ச்சி அல்ல என்றும், அதில் 8 பேர் மட்டுமே கலந்துகொண்டதாகவும் கரண் ஜோகர் தெரிவித்தார்.
இந்த நிலையில் பா.ஜனதா மூத்த தலைவர் ஆசிஷ் செலார் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கரண் ஜோகர் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த விருந்து நிகழ்ச்சியில் மராட்டிய மந்திரி ஒருவர் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. அதை அறிய விரும்புவதாக அவர் மாநகராட்சிக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.
கரண் ஜோகரின் வீட்டு கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் யார்-யார்? என்பதை கண்டறிய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
Related Tags :
Next Story