மாரியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.23 லட்சம்


மாரியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.23 லட்சம்
x
தினத்தந்தி 17 Dec 2021 1:34 AM IST (Updated: 17 Dec 2021 1:34 AM IST)
t-max-icont-min-icon

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.23 லட்சம் கிடைத்துள்ளது.

சாத்தூர், 
 சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்படுவது வழக்கம். அதன்படி 11 உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடந்தது. அதில் ரூ. 23 லட்சத்து 99 ஆயிரத்து 457-ம், தங்கம் 111 கிராம் 500 மில்லியும், வௌ்ளி 470 கிராம் இருந்தது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் சாத்தூர், துலுக்கப்பட்டி ஆகிய பகுதிகளைசேர்ந்த ஓம்சக்தி பக்தர் குழு மற்றும் அய்யப்ப சேவா சங்கம், கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இந்து சமய அறநிலைய துறை விருதுநகர் கோவில்களின் உதவி ஆணையர் கணேசன், இருக்கன்குடி கோவில் ஆணையர் கருணாகரன் தலைமையில் பரம்பரை அறங்காவலர் குழுவினர் மற்றும் ஆய்வாளர்கள் இந்த பணிகளை பார்வையிட்டனர். 


Next Story