கண்மாய்களில் மறுசீரமைப்பு பணி
ராஜபாளையம் பகுதியில் உள்ள கண்மாய்களில் மறு சீரமைப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் பகுதியில் உள்ள கண்மாய்களில் மறு சீரமைப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
மறு சீரமைப்பு
ராஜபாளையம் பகுதியில் உள்ள கொண்டனேரி கண்மாய், புளியங்குளம் கண்மாய், வேட்டை பெருமாள் கோவில் கண்மாய் ஆகிய கண்மாய்களின் மறுசீரமைப்பு செய்வது குறித்து கலெக்டர் மேகநாத ரெட்டி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனை தொடர்ந்து, ராஜபாளையம் நகராட்சியில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருவதை முன்னிட்டு, கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமான பணிகளையும், நகராட்சி குப்பைக் கிடங்கு மேலாண்மை பணிகளையும் கலெக்டர் மேகநாதரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் மாவட்ட கலெக்டர் கூறியதாவது:-
ராஜபாளையம் நகராட்சிக்கு பாதாள சாக்கடை திட்டம் மற்றும் பிரகாரம் அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ.246.99 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த திட்டமிடப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
3 மண்டலம்
ராஜபாளையம் நகராட்சி 42 வார்டுகளை கொண்டதாகும். இது 3 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இங்கு தனி, தனியாக கழிவு நீரேற்றும் நிலையம் அமைப்பதற்கு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
ராஜபாளையம் பாதாள சாக்கடை திட்டத்தில் கழிவு நீர் சேகரிப்பு, கழிவு நீர் உந்து குழாய்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது 64 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.
இ்வ்வாறு அவர் கூறினார்.
ராஜபாளையம் வட்டத்தில் உள்ள உரக்கிடங்கு பகுதிகளை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது செயற்பொறியாளர்கள் முகமது இஸ்மாயில், ராஜா, பாலசுப்பிரமணி, நகராட்சி ஆணையாளர் சுந்தராம்பாள், சமூக பாதுகாப்பு திட்டம் வட்டாட்சியர் ரங்கநாதன், ராம்கோ மக்கள் தொடர்பு அலுவலர் முருகேசன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story