தண்டவாளத்தில் தாய் பிணமாக மீட்பு


தண்டவாளத்தில் தாய் பிணமாக மீட்பு
x
தினத்தந்தி 17 Dec 2021 2:44 AM IST (Updated: 17 Dec 2021 2:44 AM IST)
t-max-icont-min-icon

பணகுடி அருகே மகன் இறந்த 2 மாதத்தில் தண்டவாளத்தில் தாய் படுகாயங்களுடன் பிணமாக மீட்கப்பட்டார்

நாகர்கோவில்:
பணகுடி அருகே மகன் இறந்த 2 மாதத்தில் தண்டவாளத்தில் தாய் படுகாயங்களுடன் பிணமாக மீட்கப்பட்டார்
இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தண்டவாளத்தில் பெண் பிணம்
பணகுடி அருகே உள்ள ரெயில் தண்டவாளத்தில் நேற்று காலை ஒரு பெண் படுகாயங்களுடன் பிணமாக கிடந்தார். இதை பார்த்த அந்த பகுதி மக்கள் உடனே நாகர்கோவில் ரெயில் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். 
அதன் பேரில் தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமார் ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.
மகன் இறந்த 2 மாதத்தில்
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், பணகுடி சைதம்மாள் தெருவை சேர்ந்த ஆறுமுகத்தின் மனைவி கனகமணி (வயது 62) என்பது தெரியவந்தது. இவர்களுக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் இருந்தனர். மகள்களுக்கு திருமணமாகி விட்டது. ஆறுமுகம் ஏற்கனவே இறந்துவிட்டார். இந்தநிலையில் மகன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ரெயிலில் அடிபட்டு இறந்தார்.
இதனால் கனகமணி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் தண்டவாளத்தில் அவர் படுகாயங்களுடன் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.
எனவே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அவர் ரெயில் மோதி இறந்தாரா? அல்லது மகன் இறந்த சோகத்தில் விபரீத முடிவை தேடிக் கொண்டாரா? என ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story