வடமாநிலத்தை சேர்ந்த 2 பேரை பிடித்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்
பாலீஸ் போடுவதாக சுற்றித்திரிந்த வடமாநிலத்தை சேர்ந்த 2 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர்- ஆத்தூர் சாலையில் உள்ள ஜமாலியா நகரில் நேற்று மதியம் வடமாநிலத்தை சேர்ந்த 3 பேர் நகைகளுக்கு பாலீஷ் போட்டு தருவதாக கூறி சுற்றித்திரிந்தனர். பெரம்பலூரில் சமீப காலமாக தொடர் திருட்டு நடைபெற்று வருவதால், வந்தவர்கள் திருடர்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில், அந்த 3 பேரையும் பொதுமக்கள் பிடிக்க முயன்றனர். அப்போது ஒருவர் தப்பியோடி விட்டார். மற்ற 2 பேரை பிடித்த பொதுமக்கள், அவர்களை பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story