முப்படை தளபதி இறப்பு குறித்து முகநூலில் அவதூறு பரப்பிய மக்கள் அதிகாரம் நிர்வாகி மீது வழக்கு
முப்படை தளபதி இறப்பு குறித்து முகநூலில் அவதூறு பரப்பிய மக்கள் அதிகாரம் நிர்வாகி மீது வழக்கு
பென்னாகரம்:
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள கரியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 37). இவர் மக்கள் அதிகாரம் என்ற அமைப்பின் தர்மபுரி மண்டல பொருளாளராக இருந்து வருகிறார். கடந்த 9-ந் தேதி இவர் தனது முகநூல் பதிவில் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் இறந்தது தொடர்பாக அவரது புகைப்படத்தை பதிவேற்றம் செய்து அவதூறான செய்தி பரப்பியதாக தெரிகிறது. இதையடுத்து பென்னாகரம் போலீசார், கோபிநாத் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தலைமறைவான அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story