கன்னியாகுமரியில் சுற்றுலா தலங்களுக்கு 3 நாட்கள் பொதுமக்கள் செல்ல தடை


கன்னியாகுமரியில் சுற்றுலா தலங்களுக்கு 3 நாட்கள் பொதுமக்கள் செல்ல தடை
x
தினத்தந்தி 17 Dec 2021 3:35 PM IST (Updated: 17 Dec 2021 4:21 PM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களுக்கு 3 நாட்கள் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி, இந்தியாவின் தென் முனையில் அமைந்துள்ள ஒரு அழகிய நகரம். வரலாற்று, பண்பாட்டு சின்னங்கள் பல ஒருங்கே அமையப்பெற்றிருக்கும் இந்த இடம் கடற்கரைக்காகவும், தமிழின் பெருமையை உலகறியச் செய்த திருவள்ளுவரின் புகழை பறைசாற்றும் திருவுருவச் சிலைக்காகவும் சுற்றுலாப் பயணிகளால் பெரிதும் விரும்பப்படுவது. இந்தநிலையில் 

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கடற்கரை, நீர்வீழ்ச்சி பூங்காக்கள் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு 3 நாட்கள் பொதுமக்கள் செல்ல தடை தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.   டிசம்பர் 31 முதல் ஜனவரி 2-ம் தேதி வரை சுற்றுலா தலங்களுக்கு தடை விதித்து மாவட்ட நிர்வாக உத்தரவிட்டுள்ளது.

Next Story