மேலச்செல்வனூர் சரணாலயத்துக்கு பறவைகள் வருகை குறைவு
சாயல்குடி அருகே மேலச்செல்வனூர் பறவைகள் சரணாலயத்துக்கு பறவைகள் வருகை குறைந்துள்ளது.
சாயல்குடி,
சாயல்குடி அருகே மேலச்செல்வனூர் பறவைகள் சரணால யத்துக்கு பறவைகள் வருகை குறைந்துள்ளது.
சரணாலயம்
தமிழகத்தின் மிகப்பெரிய பறவைகள் சரணாலயங்களில் ஒன்றாக ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே மேலச்செல்வனூர் பறவைகள் சரணாலயமும் ஒன்று. சுமார் 5.63 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பறவைகள் சரணாலயம் கடந்த 1998-ம் ஆண்டு பறவைகள் சரணாலயமாக அரசால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டது.
அதேபோல் ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்கிய பின்னர் அக்டோபர் மாதம் முதல் இந்த பறவைகள் சரணாலயத்திற்கு ஏராளமான வெளிநாட்டு பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வருவது வழக்கம்.
அவவை மரங்களில் கூடு கட்டி முட்டையிட்டு குஞ்சு பொரித்து மீண்டும் மார்ச் முதல் ஏப்ரல் மாதத்திற்குள் அனைத்து பறவைகளும் திரும்பி சென்று விடும்.
இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலாக நல்ல மழை பெய்தும் சாயல்குடி மற்றும் மேலச்செல்வனூர் உள்ளிட்ட சுற்றி உள்ள பல கிராமங்களில் இந்த ஆண்டு மழை குறைவாகவே பெய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் மேலச்செல்வனூர் பறவைகள் சரணாலயம் நீர்நிலைகளில் நீர்வரத்து கடந்த 2 ஆண்டுகளை காட்டிலும் இந்த ஆண்டு மிக குறைவாகவே உள்ளது.
சீசன்
இதனிடையே பறவைகள் சீசன் தொடங்கி 2 மாதங்கள் கடந்த நிலையிலும் சரணாலயத்தில் தண்ணீர்அதிக அளவு இல்லாததால் இந்த ஆண்டு இந்த பறவைகள் சரணாலயத் திற்கு மிக மிக குறைந்த அளவிலான பறவைகள் மட்டுமே வந்துள்ளதாக கூறப்படுகிறது.
நத்தை கொத்தி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், கருப்பு அரிவாள் மூக்கன், கரண்டிவாயன், கூழைக்கடா மற்றும் பலவகை வாத்து உள்ளிட்ட சுமார் 2 ஆயிரத்திற்கும் குறை வான பறவைகள் மட்டுமே வந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆக்கிரமிப்பு
இதுபற்றி மேலச்செல்வனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பாண்டி கூறியதாவது:- சரணாலயத்திற்கு வரக்கூடிய நீர் வழி பாதைகள் பல இடங்களில் ஆக்கிரமிப்பால் அடைக்கப் பட்டு உள்ளதால் வைகை நீர் இந்த சரணாலயத்திற்கு வர முடியாத ஒரு நிலையே பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. மழை குறைவாக பெய்துள்ளதால் நீரின் சரணாலயத்தில் நிலையிலும் நீர் குறைந்து காணப்படுவதால் இந்த ஆண்டு பறவைகள் மிக மிகக் குறைவாகவே வந்துள்ளது.
எனவே வைகை அணையில் இருந்து திறக்கப்படும் வெள்ள நீர் மேலச்செல்வனூர் சரணாலய நீர் நிலைக்கும் வரும் வகை யிலான ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் அகற்றி தூர்வாரி இந்த பகுதியில் உள்ள நீர் நிலையிலும் அதிக நீர் சேமித்து வைப்பதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் உடனடி யாக செய்ய வேண்டும்.
வசதி
மேலச்செல்வனூர் பறவைகள் சரணாலயம் நீர் நிலையில் அதிகமாக நீர் சேமித்து வைக்கப்படும் பட்சத்தில் பல கிராமங்களில் விவசாயிகளுக்கு இந்த நீர் பயன்படுத்து வதற்கும் மிகவும் வசதியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story