‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி காணை நோய் தாக்கிய ஆடு, மாடுகளுக்கு சிகிச்சை
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியால், காணை நோய் தாக்கிய ஆடு, மாடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
கடமலைக்குண்டு:
கடமலை-மயிலை ஒன்றியம் வருசநாடு, தும்மக்குண்டு, கோம்பைத்தொழு, குமணன்தொழு உள்ளிட்ட கிராமங்களில் காணை நோய் பரவல் காரணமாக ஏராளமான ஆடு, மாடுகள் பலியானது. எனவே கால்நடைத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கிராமங்களில் முகாம் அமைத்து நோயை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக தினத்தந்தியில் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக நேற்று குமணன்தொழு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கால்நடை டாக்டர் வெயிலான் தலைமையிலான மருத்துவ குழுவினர் வீடு வீடாக சென்று காணை நோய் தாக்கிய ஆடு, மாடுகளுக்கு சிகிச்சை அளித்தனர். மேலும் காணை நோய் பாதிப்பிலிருந்து கால்நடைகளை பாதுகாக்கும் முறைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கினர். இதேபோல வருசநாடு பகுதியில் கால்நடை டாக்டர் மதுசூதனன் தலைமையிலான மருத்துவ குழுவினர் காணை நோயால் பாதிக்கப்பட்ட ஆடு, மாடுகளுக்கு சிகிச்சை அளித்தனர்.
Related Tags :
Next Story