தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவில் கள்ளர் வெட்டு திருவிழாவில் இன்றுமுதல் பக்தர்கள் பங்கேற்க அனுமதி


தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவில் கள்ளர் வெட்டு திருவிழாவில் இன்றுமுதல் பக்தர்கள் பங்கேற்க அனுமதி
x
தினத்தந்தி 17 Dec 2021 6:18 PM IST (Updated: 17 Dec 2021 6:18 PM IST)
t-max-icont-min-icon

தேரிக்குடியிருப்பு கற்குவேல்அய்யனார் திருக்கோவில் கள்ளர் வெட்டு திருவிழாவில் இன்று முதல் நேமிசங்கள் செலுத்தி வழக்கமான வழிபாடுகள் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது

உடன்குடி:
தேரிக்குடியிருப்பு கற்குவேல்அய்யனார் திருக்கோவில் கள்ளர் வெட்டு திருவிழாவில் இன்று(சனிக்கிழமை) முதல் நேமிசங்கள் செலுத்தி வழக்கமான வழிபாடுகள் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புனித மணல் எடுக்க பக்தர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.
கள்ளர் வெட்டு திருவிழா
 திருச்செந்தூர் வட்டம் குதிரைமொழி கிராமம் செம்மணல் தேரியில் உள்ள தேரிகுடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவில் தென் மாவட்டங்களில் மிகவும் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாகும். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளும் கள்ளர் வெட்டு திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு காரணமாக பக்தர்கள் இல்லாமல், கடந்த 2 நாட்களாக கள்ளர் வெட்டு நிகழ்ச்சி நடந்தது.
 பக்தர்களுக்கு இன்று முதல் அனுமதி 
நேற்று நடந்த திருவிழாவில் பக்தர்களுக்கு முழு நேரமும் அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் கோவில் வளாகப் பகுதிக்கு வராமல் பல்வேறு இடங்களில் போலீசார் தடுப்புகளை அமைத்து இருந்தனர். ஆனால் திருக்கோவிலில் வழக்கமான பூஜைகள் சிறப்பாக நடந்தது. 
இன்று(சனிக்கிழமை)  முதல் வழக்கம் போல காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் மொட்டைபோடுதல் காதுகுத்தல், ஆடு. கோழி போன்ற நேமிசங்கல் செலுத்தி, படையல் போட்டு வழிபாடு செய்ய முழுஅனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
புனித மணல் பிரசாதம்
எனவே, இன்று முதல் தங்களது நேமிசங்களை செலுத்தி புனித மணல் பிரசாதத்தை பெற்று கொள்ள பக்தர்கள் குடும்பத்துடன் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story