திருச்செந்தூரில் மோட்டார் சைக்கிள் மீது சுற்றுலா வேன் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்
திருச்செந்தூரில் மோட்டார் சைக்கிள் மீது சுற்றுலா வேன் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்
திருச்செந்தூர்:
திருச்செந்தூரில் மோட்டார் சைக்கிள் மீது சுற்றுலா வேன் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.
மோட்டார் சைக்கிள் மீது...
திருச்செந்தூர் அருகே வீரபாண்டியன்பட்டினம் முத்துநகரை சேர்ந்த காளி மகன் பாலமுருகன் (24). இவர் ஆக்டிங் டிரைவராக செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் திருச்செந்தூர் வந்து கொண்டு இருந்தார். திருச்செந்தூர் மெயின் ரோட்டில் காமராஜர் நகர் அருகில் வரும்போது எதிரே வேகமாக வந்த சுற்றுலா வேன், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
சாவு
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட பாலமுருகன் பலத்த காயத்துடன் ரோட்டில் மயங்கி விழுந்தார். அப்போது அங்கு வந்த அவரது மாமா ஆறுமுகம் பாலமுருகனை ஒரு வாகனத்தில் ஏற்றி திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவருக்கு முதல் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அவர் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பாலமுருகன் நேற்று அதிகாலை உயிரிழந்தார்.
போலீசார் விசாரணை
இச்சம்பவம் தொடர்பாக ஆறுமுகம் கொடுத்த புகாரின் பேரில் சுற்றுலா வேன் டிரைவர் தூத்துக்குடி கோரம்பள்ளம் சோரீஸ்புரத்தை சேர்ந்த பட்டுராஜன் மீது திருச்செந்தூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன், சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story