மதுராந்தகம் அருகே தனியார் தொழிற்சாலையில் தீ விபத்து


மதுராந்தகம் அருகே தனியார் தொழிற்சாலையில் தீ விபத்து
x
தினத்தந்தி 17 Dec 2021 6:34 PM IST (Updated: 17 Dec 2021 6:34 PM IST)
t-max-icont-min-icon

மதுராந்தகம் அருகே தனியார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

தனியார் கம்பெனி

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே புதுப்பட்டு கிராமத்தில் கார்களுக்கு மேட் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு நேற்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த பஞ்சு, பிளாஸ்டிக், லெதர் போன்ற பொருட்கள் எரிந்து நாசமாயினது. இதனால் அந்த பகுதியில் 30 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு கரும்புகை சூழ்ந்தது.

பொதுமக்கள் குற்றச்சாட்டு

இந்த விபத்து காரணமாக சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மூச்சுதினறல் ஏற்பட்டு பாதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து அந்த பகுதிமக்கள் கூறுகையில், இந்த தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்படுவது வழக்கமாகி விட்டது. மேலும் இந்த தொழிற்சாலை எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் இயங்கி வருவதாகவும் குற்றமஞ்சாட்டினர்.

இதுகுறித்து மதுராந்தகம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story