திருவள்ளூர் அருகே வாலிபர் கொலை வழக்கில் 3 பேர் கைது


திருவள்ளூர் அருகே வாலிபர் கொலை வழக்கில் 3 பேர் கைது
x
தினத்தந்தி 17 Dec 2021 8:09 PM IST (Updated: 17 Dec 2021 8:09 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே வாலிபர் கொலை வழக்கில் 3 பேரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

திருவள்ளூரை அடுத்த மப்பேடு கீழச்சேரியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வடமாநிலத்தை சேர்ந்த ஏராளமானோர் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம் அருகே, அசாம் மாநிலத்தை சேர்ந்த அப்துல் அசின் (வயது 20) உள்ளிட்ட 5 பேர் தங்கி இருந்தனர். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் அப்துல் அசின் உள்ளிட்ட அவருடன் பணிபுரியும் சக பணியாளர்களை கையாலும், உருட்டுக்கட்டையாலும் சரமாரியாக தாக்கினர். அவர்கள் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி அப்துல் அசின் பரிதாபமாக இறந்து போனார். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது குறித்து மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த வழக்கில் சம்பந்தப்பட்டதாக திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூரை சேர்ந்த தினேஷ் (25), செய்யம்பாக்கத்தை சேர்ந்த பிரபு (32), மப்பேடு பகுதியை சேர்ந்த முத்தீஸ் (28) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் 7 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.


Next Story