கொடைக்கானலில் கொட்டித்தீர்த்த மழை


கொடைக்கானலில் கொட்டித்தீர்த்த மழை
x
தினத்தந்தி 17 Dec 2021 9:51 PM IST (Updated: 17 Dec 2021 9:51 PM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானலில் பலத்த மழை கொட்டித்தீர்த்தது.

கொடைக்கானல்:
கொடைக்கானல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தற்போது குளிர் சீசன் நிலவுகிறது. குறிப்பாக மாலை நேரத்திலேயே கடும் குளிர் வாட்டுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டனர். கொடைக்கானலில் கொட்டித்தீர்த்த மழை ஓய்ந்த நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கு பிறகு நேற்று காலை வெப்பமான வானிலை நிலவியது.
இதைத்தொடர்ந்து மாலையில் மேக மூட்டம் சூழ்ந்து நகரின் பல்வேறு இடங்களில் பரவலாக பலத்தமழை கொட்டித்தீர்த்தது. சில இடங்களில், சாரல் மழை தூறியது. இதன் காரணமாக பியர்சோழா அருவி உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மேலும் குளிரின் தாக்கம் குறைந்தது. மழைக்கு பிறகு மேகமூட்டம் தரை இறங்கியது. இதன் எதிரொலியாக, வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர். பள்ளி, கல்லூரிகள் முடிவடையும் நேரத்தில் மழை பெய்ததால் மாணவ-மாணவிகள் நனைந்தபடி வீடுகளுக்கு திரும்பினர்.

Next Story