கிராம மக்கள் முற்றுகை
தரமற்ற அரிசி வழங்கியதால் கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
முதுகுளத்தூர்,
முதுகுளத்தூர் அருகே கண்ணத்தானில் உள்ள ரேஷன் கடையில் விளக்கனேந்தல், குடும்பன்குளம், அடிபிடிதாங்கி, வெள்ளி மரைக்கான், மூலக்கரைப்பட்டி, புல்வாய்க்கினி யேந்தல், கண்ணத்தான் ஆகிய 7 கிராமங்களை சேர்ந்த மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கி வருகின்றனர். இங்கு. வழங்கப்பட்ட அரிசி தரமற்ற முறையிலும் புழு, பூச்சி, வண்டுகள் அதிக அளவில் கிடந்ததாலும் அரிசியில் துர்நாற்றம் ஏற்பட்டதால் பொதுமக்கள் ரேஷன் கடை முன்பாக அரிசியினை கீழே கொட்டி ரேஷன் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரேஷன் கடை ஊழியர்கள் கடையை அடைத்து விட்டு சென்றனர். பொதுமக்கள் யாரும் அரிசியை வாங்காமல் திரும்பி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.மேலும் இனிமேல் தரமான அரிசியை வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
Related Tags :
Next Story