நீர்வழிப்பாதைகளில் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களுக்கு பிரதம மந்திரி குடியிருப்பு வழங்கும் திட்டத்தில் வீடுகள் வழங்க நடவடிக்கை


நீர்வழிப்பாதைகளில் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களுக்கு பிரதம மந்திரி குடியிருப்பு வழங்கும் திட்டத்தில் வீடுகள் வழங்க நடவடிக்கை
x
தினத்தந்தி 17 Dec 2021 10:55 PM IST (Updated: 17 Dec 2021 10:55 PM IST)
t-max-icont-min-icon

பிரதம மந்திரி குடியிருப்பு வழங்கும் திட்டத்தில் வீடுகள் வழங்க நடவடிக்கை

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைத்தீர்வு நாள் கூட்டம் கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்துகொண்டு விவசாயம் தொடர்பான குறைகளை தெரிவித்து பேசினர். கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் மொத்தம் 49 ஏரிகளும், ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் 285 ஏரிகளும், 269 குளம், குட்டைகளும் உள்ளன. இவற்றில் எந்தெந்த ஏரிகளுக்கு தண்ணீர் செல்லவில்லை என்று கண்டறிந்து அதனை சரிசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் நீர்வழிப்பாகைளில் ஆக்கிரமிப்பு செய்து அங்கு வாழும் மக்களை கணக்கெடுப்பு செய்து அவர்களுக்கு பிரதம மந்திரி குடியிருப்பு வழங்கும் திட்டத்தில் வீடுகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம, நகர பகுதிகளில் உள்ள சாலைகள் விரைவில் சீரமைக்கப்படும். விவசாயிகளுக்கு வங்கி அலுவலர்களுடன் கூட்டம் ஒன்று ஏற்படுத்தி அதில் வங்கிக் கடன் பெறுவதற்கு எந்த ஆவணங்கள் வேண்டும் என வங்கி அலுவலர்கள் தெரிவித்தால் விவசாயிகள் அந்த ஆவணங்களை சமர்ப்பித்து எளிதில் கடன் பெறலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story