கிணற்றில் தவறிவிழுந்து பள்ளி மாணவன் பலி


கிணற்றில் தவறிவிழுந்து பள்ளி மாணவன் பலி
x
தினத்தந்தி 17 Dec 2021 10:56 PM IST (Updated: 17 Dec 2021 10:56 PM IST)
t-max-icont-min-icon

கிணற்றில் தவறிவிழுந்து பள்ளி மாணவன் பலி

வேலூர்

வேலூர் தொரப்பாடி, கே.கே.நகரை சேர்ந்தவர் பாஷா. இவரது மகன் நவாஸ் (வயது 14). சைதாப்பேட்டையில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் நேற்று மதியம் 2 மணி அளவில் தனது நண்பர்களுடன் தொரப்பாடியில் உள்ள ஏரி வழியே நடந்து சென்றான். அப்போது ஏரியில் இருந்த தரைமட்ட கிணற்றில் எதிர்பாராத விதமாக நவாஸ் தவறி விழுந்து. தண்ணீரில் மூழ்கினான்.

நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. இதுகுறித்து வேலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றில் குதித்து நவாஸை தேடினர். சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் பிணமாக மீட்டனர். இதுகுறித்து பாகாயம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story