பாலாற்று தரைப்பாலம் சேதமடைந்ததால் பொதுமக்கள், மாணவர்கள் பாதிப்பு


பாலாற்று தரைப்பாலம் சேதமடைந்ததால் பொதுமக்கள், மாணவர்கள் பாதிப்பு
x
தினத்தந்தி 17 Dec 2021 10:56 PM IST (Updated: 17 Dec 2021 10:56 PM IST)
t-max-icont-min-icon

பாலாற்று தரைப்பாலம் சேதமடைந்ததால் பொதுமக்கள், மாணவர்கள் பாதிப்பு

ஆம்பூர்

ஆம்பூர் பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக மாதனூர் தரைப்பாலம் உடைந்தது. இதனால் மாதனூரிலிருந்து குடியாத்தம் செல்லும் பொதுமக்கள் பள்ளிகொண்டா வழியாக சென்று வருகின்றனர். இதேபோல் ஆம்பூர் பச்சகுப்பம் பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக, குடியாத்தம் செல்லும் வழியில் உள்ள ரெட்டிமாங்குப்பம், அழிஞ்சிகுப்பம், மேல்வழித்துணையாங்குப்பம், மேல்பட்டி, கீழ்பட்டி வளத்தூர் கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதேபோல் நரியம்பட்டு பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக ஆம்பூரிலிருந்து நரியம்பட்டு வழியாக குடியாத்தம் செல்ல முடியாத நிலைஉள்ளது.

பாலாறு, கானாறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாகவும், கானாறு, தரைப்பாலங்கள் சேதமடைந்து துண்டிக்கப்பட்டதாலும் சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. அதனால் பணிக்கு செல்லும் தொழிலாளர்கள், அலுவலகங்களுக்கு செல்லும் பணியாளர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தொலை தூரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

பொதுமக்கள் சிலர் மற்றும் பள்ளி மாணவர்கள் ஆபத்தை உணராமல் தண்ணீரில் கடந்து செல்கின்றனர். எனவே பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி போர்க்கால அடிப்படையில் அதிகாரிகள் உடனடியாக பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story