நாகர்கோவிலில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
நாகர்கோவிலில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.
அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நேற்று அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதேபோல் குமரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்துக்கு குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் அசோகன், மேற்கு மாவட்ட செயலாளர் ஜாண்தங்கம் ஆகியோர் தலைமை தாங்கினர்.
தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ.
தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறும்போது, "மினி கிளினிக்கை ரத்து செய்யும் திட்டத்தை கைவிட வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், உழவர்களுக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும், நாகர்கோவில் நகரின் சாலைகள் உள்பட குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சாலைகளும் பழுதடைந்து காணப்படுகிறது. அதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
கோஷங்கள்
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்ட் தாஸ், முன்னாள் அமைச்சர் கே.டி.பச்சைமால், அவைத்தலைவர் சேவியர் மனோகரன், மாநகர செயலாளர் சந்துரு, மாநில செயற்குழு உறுப்பினர் டாரதி சாம்சன், ஒன்றிய செயலாளர்கள் குற்றியார் நிமால், பொன்.சுந்தர்நாத், அணி செயலாளர்கள் மனோகரன், சுகுமாரன், வக்கீல் சுந்தரம், விவசாய அணி மாவட்ட தலைவர் வடிவை மாதவன், பொருளாளர் ஆ.கோ.ஆறுமுகம், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் நீல பெருமாள், தோவாளை ஊராட்சி ஒன்றிய தலைவர் சாந்தினி பகவதியப்பன், முன்னாள் பாசறை இணை செயலாளர் அக்ஷயா கண்ணன், நிர்வாகிகள் சலாம், ஜெயசுதர்சன், ஜீன்ஸ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
Related Tags :
Next Story