தஞ்சை மாவட்டத்தில் 2-வது நாளாக வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்


தஞ்சை மாவட்டத்தில் 2-வது நாளாக வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 18 Dec 2021 1:49 AM IST (Updated: 18 Dec 2021 1:49 AM IST)
t-max-icont-min-icon

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் முடிவை கண்டித்து தஞ்சை மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்:
பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் முடிவை கண்டித்து தஞ்சை மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
வேலை நிறுத்தம்
பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் சட்ட முன்வடிவை மத்திய அரசு வருகிற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து நாடு முழுவதும் 2 நாட்கள் வங்கி ஊழியர்கள், அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சை மாவட்டத்தில் 2-வது நாளாக 300-க்கும் மேற்பட்ட வங்கிகளை சேர்ந்த ஊழியர்கள், அதிகாரிகள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வங்கிகள் இயங்கவில்லை. ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. சில வங்கிகள் மூடி கிடந்தன. 2 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தினால் பெரும்பாலான ஏ.டி.எம். மையங்களில் பணம் இல்லாத நிலை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
ஆர்ப்பாட்டம்
தஞ்சை மாவட்டத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மண்டல அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு அகில இந்திய வங்கி ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரிகள் சங்க உதவி பொதுச் செயலாளர் சக்கரவர்த்தி, இந்தியன் வங்கி ஊழியர் சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலாளர் சொக்கலிங்கம், ஸ்டேட் வங்கி அலுவலர்கள் சங்க மண்டல செயலாளர் குருநாதன், தேசிய வங்கி ஊழியர் கூட்டமைப்பு செயலாளர் நந்தகுமார், ஓய்வு பெற்றோர் சங்க நிர்வாகி சுப்புராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story