பலியான மாணவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி - அரசியல் கட்சியினர் வலியுறுத்தல்


பலியான மாணவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி - அரசியல் கட்சியினர் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 18 Dec 2021 2:16 AM IST (Updated: 18 Dec 2021 2:16 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் பள்ளிக்கூட சுவர் இடிந்து பலியான மாணவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி வழங்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் வலியுறுத்தினர்.

நெல்லை:
நெல்லை சாப்டர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று கழிவறை கட்டிட சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் அங்கு திரண்டனர்.

காங்கிரஸ் மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ராமகிருஷ்ணன், தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாநகர செயலாளர் துரைப்பாண்டியன், மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன், இளைஞர் பெருமன்றம் ராஜேஷ், சமூக ஆர்வலர் மகேஷ் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் பள்ளிக்கூட வளாகத்தில் திரண்டனர். பின்னர் அங்கு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளிக்கூட நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். முடிவில் ஒரு கோரிக்கை மனுவை மாநகர துணை போலீஸ் கமிஷனர் கே.சுரேஷ்குமாரிடம் வழங்கினர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘‘அஸ்திவாரம் இல்லாமல் கட்டப்பட்டுள்ள தடுப்புச்சுவர் மாணவர்கள் மீது இடிந்து விழுந்துள்ளது. இதற்கு காரணமான பள்ளிக்கூட நிர்வாகம் மீது வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நிவாரணம் ஒரு பக்கம் வழங்கினாலும், பள்ளிக்கூட நிர்வாகம் எந்தவித நிபந்தனையும் இன்றி இறந்த மாணவர்களுக்கு தலா ரூ.1 கோடி உடனே வழங்க வேண்டும். இல்லாவிட்டால் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்’’ என்றனர்.

Next Story