அய்யப்ப சாமி வீதி உலா


அய்யப்ப சாமி வீதி உலா
x
தினத்தந்தி 18 Dec 2021 3:17 AM IST (Updated: 18 Dec 2021 3:17 AM IST)
t-max-icont-min-icon

அய்யப்ப சாமி வீதி உலா நடந்தது.

ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள பெருமாள் கோவிலில் அய்யப்பன் சன்னதி உள்ளது. கார்த்திகை மாதம் முதல் தேதியில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து அய்யப்பனை வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் மார்கழி மாத முதல் நாளன்று அய்யப்பன் உள்ளிட்ட சாமி சிலைகளுக்கு நாதஸ்வரம் முழங்க சிறப்பு நெய் அபிஷேகம் மற்றும் மஞ்சள், சந்தனம் பால், தயிர், திரவியப்பொடி உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்து, வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பித்து வழிபட்டனர். இதைத்தொடர்ந்து அய்யப்பன் சிலைகள் உள்ளிட்ட சாமி சிலைகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா நடைபெற்றது. இதில் செண்டை மேளம் முழங்க வாணவேடிக்கையுடன் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு அம்மன், அய்யப்பன், சிவன், பார்வதி உள்ளிட்ட சாமிகள் வேடம் அணிந்த பக்தர்கள் நடனம் ஆடியபடி ஊர்வலமாக வந்தனர். ஜெயங்கொண்டம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Next Story