அதியமான்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி பெண் பலி ஒருவர் படுகாயம்
அதியமான்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி பெண் பலியானார். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அருகே உள்ள சவுளுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விஜயலட்சுமி (39). இவர் நேற்று ஒட்டப்பட்டியை சேர்ந்த குமார் (42) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் நல்லம்பள்ளிக்கு சென்றார். அதியமான்கோட்டை அரசு ஆண்கள் பள்ளி அருகே சென்றபோது, பின்னால் தர்மபுரியில் இருந்து சேலம் நோக்கி வந்த தனியார் பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் தவறி கீழே விழுந்த விஜயலட்சுமி மீது பஸ் சக்கரம் ஏறியது. இதில் தலை நசுங்கி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story