போலி ஆவணங்கள் மூலம் ரூ.2 கோடி சொத்து அபகரிப்பு - 3 பேர் கைது


போலி ஆவணங்கள் மூலம் ரூ.2 கோடி சொத்து அபகரிப்பு - 3 பேர் கைது
x
தினத்தந்தி 18 Dec 2021 11:31 AM IST (Updated: 18 Dec 2021 11:31 AM IST)
t-max-icont-min-icon

போலி ஆவணங்கள் மூலம் ரூ.2 கோடி சொத்து அபகரிப்பில் ஈடுப்பட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை, 

சென்னையை அடுத்த கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்த ஹேமலதா (வயது 63) என்பவருக்கு சொந்தமான 3,745 சதுர அடி காலி இடம், போலி ஆவணங்கள் மற்றும் போலி அடையாள அட்டைகள் வைத்து நில அபகரிப்பு செய்யப்பட்டுள்ளது. இதேபோல், அம்பத்தூர் புத்தகரத்தை சேர்ந்த புனிதவதிக்கு சொந்தமான 2,400 சதுர அடி காலி மனையும் நில அபகரிப்பு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, சென்னை போலீஸ் கமிஷனரிடம் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 

போலீசார் நடத்திய புலன் விசாரணையில், பழைய பல்லாவரத்தை சேர்ந்த சரவணன் (37), அஸ்தினாபுரத்தை சேர்ந்த மனோகர் (47), கொளத்தூர் புத்தகரத்தை சேர்ந்த ராமராஜ் (33) ஆகிய 3 பேர் போலி ஆவணங்கள், போலி அடையாள அட்டைகள் மூலம் இருவரின் நிலங்களையும் அபகரிப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்த முறைகேட்டின் மூலம் ரூ.50 லட்சம் வரை ஆதாயம் அடைந்துள்ளனர். இந்த நிலங்களின் மதிப்பு ரூ.2 கோடி ஆகும்.

Next Story