போலீசாரை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நீடாமங்கலம்:-
நீடாமங்கலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போலீசாரை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் புதியவன் தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர் முருகையன், மாவட்ட அமைப்பாளர் தமிழ்வளவன், மாநில செயற்குழு உறுப்பினர் பார்வேந்தன், மன்னை ஒன்றிய செயலாளர் செங்குட்டுவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மயிலாடுதுறை மாவட்டம் பட்டவர்த்தியில் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களையும், அதற்கு துணை நின்ற போலீசாரையும் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. நாடாளுமன்ற தொகுதி செயலாளர் இளந்தென்றல், கட்சி நிர்வாகிகள் பவுத்தன், ஆதவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story