போடியில் சுற்றித்திரிந்த 40 பன்றிகள் பிடிபட்டன


போடியில் சுற்றித்திரிந்த 40 பன்றிகள் பிடிபட்டன
x
தினத்தந்தி 18 Dec 2021 7:09 PM IST (Updated: 18 Dec 2021 7:09 PM IST)
t-max-icont-min-icon

போடி பகுதியில் சுற்றித்திரிந்த 40 பன்றிகள் பிடிபட்டன.

போடி (மீனாட்சிபுரம்):
போடி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் ஏராளமான பன்றிகள் சுற்றித்திரிந்தன. இதனால் பொதுமக்களுக்கும், சுகாதாரத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் போடி நகராட்சி ஆணையாளர் சகிலாவிடம் புகார் செய்தனர். உடனே அவர், நகரில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று சுகாதார ஆய்வாளர்களுக்கு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து போடியில் சுற்றித்திரிந்த 40 பன்றிகளை பிடித்து ஊருக்கு வெளியே விடப்பட்டது. 

Next Story