காயத்துடன் சுற்றும் புலியை பிடிக்க கூண்டு வைப்பு


காயத்துடன் சுற்றும் புலியை பிடிக்க கூண்டு வைப்பு
x
தினத்தந்தி 18 Dec 2021 7:11 PM IST (Updated: 18 Dec 2021 7:11 PM IST)
t-max-icont-min-icon

காயத்துடன் சுற்றும் புலியை பிடிக்க கூண்டு வைப்பு

பந்தலூர்

பந்தலூர் அருகே உள்ள தமிழக-கேரள எல்லையான மானந்தவாடி பகுதியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கழுத்தில் காயத்துடன் புலி ஒன்று சுற்றித்திரிகிறது. அந்த புலி வனப்பகுதியையொட்டி உள்ள கிராமங்களுக்குள் புகுந்து ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை அடித்து கொல்கிறது. இதனால் கிராம மக்கள் வெளியே நடமாடவே அச்சப்படுகின்றனர். மேலும் அந்த புலியை பிடித்து சிகிச்சை அளிக்க கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று மானந்தவாடி வனத்துறையினர் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் கேமரா பொருத்தி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். 

இதற்கிடையில் மீண்டும் ஒரு பசுமாட்டை அந்த புலி அடித்து கொன்றது. இது வனத்துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் புலி நடமாட்டம் கண்டறியப்பட்ட பகுதியில் கூண்டு வைக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து புலியை பிடிக்க கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது.


Next Story