ரெயிலில் அடிபட்டு முதியவர் சாவு


ரெயிலில் அடிபட்டு முதியவர் சாவு
x
தினத்தந்தி 18 Dec 2021 8:24 PM IST (Updated: 18 Dec 2021 8:24 PM IST)
t-max-icont-min-icon

ரெயிலில் அடிபட்டு முதியவர் சாவு

திருவாரூர்:-

திருவாரூர்- நாகை ரெயில்வே வழித்தடத்தில் அடியக்கமங்கலம் ரெயில் நிலையம் முன்பு அலிவலம் வாய்க்கால் பகுதியில் உள்ள தண்டவாளம் அருகே நேற்று முன்தினம் இரவு 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருவாரூர் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வகுமார், சிவஞானம் மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரித்தனர். விசாரணையில் அந்த வழியாக வந்த ரெயிலில் முதியவர் அடிபட்டு இறந்தது தெரியவந்தது. இதையடுத்து முதியவரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story