மலைக்கிராமங்களில் அதிரடி சோதனை: 4 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு


மலைக்கிராமங்களில் அதிரடி சோதனை: 4 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
x
தினத்தந்தி 18 Dec 2021 8:28 PM IST (Updated: 18 Dec 2021 8:28 PM IST)
t-max-icont-min-icon

மலைக்கிராமங்களில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 4 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.

தலைவாசல்:
மலைக்கிராமங்களில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 4 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.
அதிரடி சோதனை
தலைவாசல் அருகே உள்ள சில மலைக்கிராமங்களில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுவதாகவும், இதற்காக சாராய ஊறல்கள் போடப்பட்டுள்ளதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபினவ் உத்தரவின்பேரில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட முடிவு செய்தனர்.
இதன்படி தலைவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் பிரபு தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் அய்யப்பன், சக்திவேல் மற்றும் போலீசார் தலைவாசல் அருகே உள்ள மலைக்கிராமங்களான மேல்பாச்சேரி, கீழ்ப்பாச்சேரி, எழுத்தூர், எலந்தவாரி, முட்டல் ஆகிய கிராமங்களில் அதிரடியாக சாராய வேட்டையில் ஈடுபட்டனர். 
4 ஆயிரம் லிட்டர்
தொடர்ந்து இந்த மலைக்கிராமங்களில் 20 பேரல்களில் சாராய ஊறல்கள் போடப்பட்டு இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். மேலும் போலீசாரை பார்த்ததும், சாராய ஊறல் போட்டவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
தொடர்ந்து போலீசார் 20 பேரல்களில் இருந்த 4 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல்களை அழித்தனர். தொடர்ந்து தலைவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சாராய ஊறல் போட்டவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.



Next Story