தடுப்புக்காவல் சட்டத்தில் சாராய வியாபாரி கைது


தடுப்புக்காவல் சட்டத்தில் சாராய வியாபாரி கைது
x
தினத்தந்தி 18 Dec 2021 9:26 PM IST (Updated: 18 Dec 2021 9:26 PM IST)
t-max-icont-min-icon

தடுப்புக்காவல் சட்டத்தில் சாராய வியாபாரி கைது செய்யப்பட்டாா்.


விழுப்புரம், 

விழுப்புரம் அருகே உள்ள லிங்காரெட்டிப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 43). இவர் மீது சாராயம் விற்பனை செய்வதாகவும், கடத்தியதாகவும் பல்வேறு வழக்குகள் உள்ளன. 


கடந்த சில வாரங்களுக்கு முன்பு சாராய வழக்கில் பன்னீர்செல்வத்தை விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தனர்.

 தொடர்ந்து இவர் சாராய வழக்கில் ஈடுபட்டு வந்ததால் இவருடைய செயல்களை தடுக்கும்பொருட்டு தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பரிந்துரைத்தார். 

அதன்படி பன்னீர்செல்வத்தை தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டுக்கு கலெக்டர் மோகன் உத்தரவிட்டார். இதையடுத்து பன்னீர்செல்வத்தை தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். 

அதற்கான உத்தரவு நகல் கடலூர் சிறையில் இருக்கும் அவருக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.

Next Story