தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போட்டி-கிருஷ்ணகிரி கலெக்டர் தகவல்


தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போட்டி-கிருஷ்ணகிரி கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 18 Dec 2021 9:29 PM IST (Updated: 18 Dec 2021 9:29 PM IST)
t-max-icont-min-icon

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளதாக கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி:
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
வாக்காளர் தினம்
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ந் தேதி தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 12-வது தேசிய வாக்காளர் தினம் அடுத்த மாதம் (ஜனவரி) 25-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக இந்திய தேர்தல் ஆணையத்தால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக பல்வேறு போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஓவியம், சுவரொட்டி செய்தல், வாக்கியங்கள் அமைத்தல், பாட்டுப்போட்டி, குழு நடன போட்டி, கட்டுரை போட்டி ஆகிய போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 
கடைசி நாள்
ஒவ்வொரு பிரிவிலும் மாவட்ட அளவில் சிறந்த 15 படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு மேலாய்விற்காக தலைமை தேர்தல் அலுவலருக்கு அனுப்பி வைக்கப்படும். போட்டிகளுக்கு நேரடியாக விண்ணப்பிக்க வருகிற 26-ந் தேதியும், இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வருகிற 31-ந் தேதியும் கடைசி நாளாகும். 
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் போட்டியில் பங்கு பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். 
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். 

Next Story