திருப்பூரில் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகையை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றனர்
திருப்பூரில் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகையை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றனர்
திருப்பூர்,
திருப்பூரில் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகையை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றனர். திருப்பதி கோவிலுக்கு சென்று விட்டு வந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
15 பவுன் நகை, பணம் திருட்டு
திருப்பூர் வெள்ளியங்காடு கே.எம்.ஜி. நகரை சேர்ந்தவர் பாபு (வயது 48). இவர் வீரபாண்டியில் சொந்தமாக சலூன் வைத்துள்ளார். கடந்த 16-ந் தேதி தனது மனைவி, மகள், மகனுடன் சேர்ந்து பாபு திருப்பதி கோவிலுக்கு புறப்பட்டு சென்றுள்ளார். பின்னர் நேற்று காலை வீட்டுக்கு வந்துள்ளார். வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பாபு, வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோவுக்குள் வைத்திருந்த 15 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை. மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பாபு திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் விசாரணை
போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சையா, சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் விநாயகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். தடயவியல் நிபுணர்கள் தடயங்களை பதிவு செய்தனர். அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள ரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ காட்சிகளையும் கைப்பற்றி போலீசார் விசாரணையை முடுக்கி உள்ளனர்.
இதுகுறித்து தெற்கு குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story