கல்வராயன்மலையில் 7 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு


கல்வராயன்மலையில்  7 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
x
தினத்தந்தி 18 Dec 2021 9:56 PM IST (Updated: 18 Dec 2021 9:56 PM IST)
t-max-icont-min-icon

கல்வராயன்மலையில் 7 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

கச்சிராயப்பாளையம்

கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜலட்சுமி மேற்பார்வையில், கச்சிராயப்பாளையம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஏழுமலை, ராமர் உள்ளிட்ட போலீசார் மல்லிகைப்பாடி வனப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுக்கி வைத்திருந்த 6,000 லிட்டர் சாராய ஊறலை போலீசார் கண்டுபிடித்து அழித்தனர். இதுதொடர்பாக அதே கிராமத்தை சேர்ந்த குமார் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். 

அதேபோல் கச்சிராயப்பாளையம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா தலைமையிலான போலீசார் கல்வராயன்மலைப் பகுதிகளில் சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது குரும்பலூர் கிராம‌ ஓடையில் 2 பேரல்களில் பதுக்கி வைத்திருந்த 1,000 லிட்டர் சாராய ஊறலை கண்டுபிடித்து அழித்தனர். இது தொடர்பாக தலைமறைவாக உள்ள கோபி‌ என்பவரை தேடி வருகின்றனர்.

Next Story